
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள காரமடை மேம்பாலம், மரியபுரம் பகுதியிலுள்ள சாலையில் முதியவர் ஒருவர் நடந்து சென்றபோது, பெண் ஒருவர் தனது கணவருடன் இருசக்கர வாகனத்தை ஓட்டி பழகி கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக முதியவர் மீது இரு சக்கர வாகனம் மோதியது. விபத்தில் முதியவர் பலத்த காயமடைந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பினர்.
இந்த விபத்து சம்பவம் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது. முதியவர் சாலையின் ஓரமாக அமைதியாக நடந்து சென்றபோது, பின்னால் வந்த இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதுவது அந்தக் காட்சியில் காணப்படுகிறது. தற்போது இந்த சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.