டைரக்டர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் படம் “மாமன்னன்”. இதில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்து உள்ளார். அதோடு இப்படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் போன்றோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.  இந்நிலையில் ’மாமன்னன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

இந்த இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகை கீர்த்தி சுரேஷிடம் திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அதற்கு பதிலளித்த அவர், அப்படியெல்லாம் எதுவும் இல்லை. நான் எல்லாவற்றிற்கும் விளக்கம் கொடுத்துட்டேன். ஏங்க என்ன கல்யாணம் பண்ணி கொடுக்குறதுலேயே இருக்கீங்க. அப்படி ஏதாவது நடந்தா சொல்றேன் என்று கூறியுள்ளார்.