தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருந்தவர் தான் நடிகர் உதயநிதி ஸ்டாலின். இவரின் பல திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சமீபத்தில் தமிழகத்தின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். அதன் பிறகு அவர் தான் சினிமாவில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஆனால் அவர் அமைச்சர் ஆவதற்கு முன்பே மாமன்னன் திரைப்படத்தில் நடித்து வந்த நிலையில் அந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த படத்தில் வடிவேலு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் மாமன்னன் படத்தில் கம்யூனிஸ்ட் பெண்ணாக தான் நடித்துள்ளதாக நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார். இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர், இந்த படத்தில் வெறும் டான்ஸ் ஆடி விட்டுச் செல்லும் நடிகையாக நடிக்கவில்லை. ஒரு கம்யூனிஸ்ட் கேரக்டரில் நடித்துள்ளேன். இந்த படம் முற்றிலும் எனக்கு வேறு மாதிரியான படம், மிகவும் சீரியசான படம், நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.