தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருந்தவர் தான் நடிகர் உதயநிதி ஸ்டாலின். இவரின் பல திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சமீபத்தில் தமிழகத்தின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். அதன் பிறகு அவர் தான் சினிமாவில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஆனால் அவர் அமைச்சர் ஆவதற்கு முன்பே மாமன்னன் திரைப்படத்தில் நடித்து வந்த நிலையில் அந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

இந்த படத்தில் வடிவேலு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் ஆண்டனி, உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதை வேறு விதமாக பேசுகின்றனர். ஆனால் நான் அவரை வாழ்த்தி அனுப்பி வைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். உதயநிதி அரசியலில் வெற்றி நடை போட வாழ்த்து தெரிவித்த விஜய் ஆண்டனி மீண்டும் சினிமாவிற்கு வர வேண்டாம் அங்கேயே இருங்கள் என்று கலகலப்பாக தெரிவித்தார்.