தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவர் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ள நிலையில் கீர்த்தி சுரேஷ், வடிவேலு மற்றும் பகத் பாசில் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகும் மாமன்னன் படம் ஜூன் 29-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் உதயநிதி இனி 3 வருடங்களுக்கு சினிமாவை விட்டு விலகி இருப்பதாக அறிவித்துள்ளார். தற்போது அமைச்சராக பொறுப்பேற்றதால் மூன்று வருடங்களுக்கு சினிமாவை விட்டு விலகி இருக்க முடிவு செய்துள்ளதாகவும், அடுத்து மக்கள்தான் முடிவு எடுப்பார்கள் என்றும் கூறியுள்ளார். மேலும் அடுத்ததாக படம் நடிப்பதாக இருந்தாலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தான் படம் நடிப்பேன் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.