SSC CGL 2023 அடுக்கு 2 தேர்வுக்கான அனுமதி அட்டைகளை மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பு மூலம் மொத்தம் 7,500 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. அடுக்கு 1 தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்த அடுக்கு 2 தேர்வை எழுத தகுதியுடையவர்கள். மேலும் விண்ணப்பதாரர்கள் https://ssc.nic.in/ என்ற  இணையதளம் உட்பட பல்வேறு எஸ்எஸ்சி அதிகாரப்பூர்வ பிராந்திய இணையதளங்களில் இருந்து அட்மிட் கார்டுகளை பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.