உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களிடமிருந்து அரசு நேரடியாக தானம் பெற்று உறுப்புகள் தேவைப்படுபவருக்கு கொடுக்கிறது. உடல் உறுப்புகள் செயலிழக்கும் பொழுது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து அந்த உறுப்பை புதுப்பித்துக் கொள்ளும் அளவிற்கு மருத்துவ தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. இதயம்,. நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், கணையம், கண்கள், கைகள் உள்ளிட்ட பல உறுப்புகளை தானமாக பெற முடியும் உடல் உறுப்புகளை தானமாக பெறுவதற்கு பாதிக்கப்பட்டவரோ அல்லது அவருடைய குடும்பத்தினரோ நேரடியாக விண்ணப்பிக்க முடியாது. பாதிக்கப்பட்டவர் சிகிச்சை பெறும் மருத்துவமனையானது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய அரசால் அங்கீகாரம் பெற்ற மருத்துவமனையாக இருக்க வேண்டும்.\

அந்த மருத்துவமனையின் மூலமாகத்தான் உடல் உறுப்புகளை தான பெற அரசிடம் விண்ணப்பிக்க வேண்டும். தனிநபராக உறுப்புகள் மாற்ற வேண்டி விண்ணப்பிக்க முடியாது. உறுப்புக்கோரி விண்ணப்பித்ததற்கு செலுத்திய பதிவு கட்டண விபரம், ஆதார் அட்டை கலர் ஜெராக்ஸ், சிகிச்சை பெற மருத்துவமனையின் பரிந்துரை கடிதம் நோயாளியின் உறுதிமொழி கடிதம் ஆகியவை தேவை. உறுப்பு மாற்று சிகிச்சைக்காக உறுப்பு வேண்டி காத்திருப்பவருடைய காத்திருப்பு பட்டியலில் தங்களுடைய விண்ணப்பத்தின் நிலையை பற்றி அறிந்து கொள்ள TRANSTAN அல்லது அலுவலக எண் 04425333676 ஐ தொடர்பு கொண்டு விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ளலாம். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் உடைய விவரங்களை தெரிந்து கொள்வதற்கு https://transtan.tn.gov.in/index.php என்னும் தமிழக அரசின் உறுப்பு மாற்று சிகிச்சைக்காக உருவாக்கப்பட்ட இணையதளத்தில் சென்று விரிவாக தெரிந்துகொள்ளலாம்.