
சென்னை மாவட்டத்தில் உள்ள தியாகராய நகர் சாம்பசிவம் தெருவில் தொழிலதிபரான மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நான் எல்.ஐ.சி இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வாடிக்கையாளராக இருக்கிறேன். கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் எல்.ஐ.சி-யில் பாலிசிதாரராக சேர்ந்து பணம் செலுத்தி வருகிறேன். இதற்கிடையே கொரோனா நோய் தொற்று காலத்தில் எல்.ஐ.சி ஏஜென்ட் ரவீந்திரன் மூலமாக பணம் செலுத்தினேன்.
அவர் அந்த பணத்தை எல்.ஐ.சி நிறுவனத்தில் முறையாக செலுத்தாமல் மோசடி செய்ததோடு என்னிடம் போலியான ரசீதையும் தயாரித்து கொடுத்தார். இவ்வாறாக 2 1/2 கோடி ரூபாய் பண மோசடி செய்த ரவீந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மோசடியில் ஈடுபட்ட ரவீந்திரனை செய்தனர். அவரை போலீசார் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.