ஜெய்ப்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் 2026 போட்டியின் போது, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நட்சத்திர வீரர் அபிஷேக் ஷர்மாவை ஒரு பெண் ரசிகை அத்துமீறி இழுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீரர்கள் தங்கும் விடுதியிலிருந்து மைதானத்திற்குப் புறப்பட்ட போது, கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி ஒரு பெண் ரசிகை திடீரென அபிஷேக் ஷர்மாவின் கையைப் பிடித்துத் தன்னை நோக்கி இழுத்துள்ளார். இந்த எதிர்பாராத செயலால் நிலைகுலைந்த அபிஷேக் ஷர்மா வெளிப்படையாகவே அதிர்ச்சியடைந்தார்.

உடனே பாதுகாப்புப் பணியாளர்கள் தலையிட்டு அந்தப் பெண்ணை அப்புறப்படுத்தினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வரும் நிலையில், ரசிகர்களின் இத்தகைய அநாகரீகமான செயல் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by H💞 (@moreofhimshikha)

“>

“ரசிகர்கள் தங்கள் எல்லைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்” என இணையவாசிகள் கொந்தளித்து வருகின்றனர். “இதே செயலை ஒரு ஆண் ரசிகர் ஒரு பெண் கிரிக்கெட் வீராங்கனையிடம் செய்திருந்தால் இந்நேரம் நிலைமையே வேறாக இருந்திருக்கும், இது அப்பட்டமான தொல்லை” எனப் பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

வைரல் வீடியோக்களுக்காகவும், தங்களுக்குப் பிடித்தமான வீரர்களைத் தொட வேண்டும் என்பதற்காகவும் பொது இடங்களில் இதுபோல வரம்பு மீறுவது கண்டிக்கத்தக்கது என விளையாட்டு ஆர்வலர்கள் பதிவிட்டு வருகின்றனர். மைதானத்திற்கு வெளியே இத்தனை கசப்பான அனுபவம் நேர்ந்தாலும், அன்றைய போட்டியில் ஹைதராபாத் அணி ராஜஸ்தான் ராயல்ஸை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது ரசிகர்களுக்குச் சற்று ஆறுதலைத் தந்துள்ளது.