இந்திய எல்லையில் சீன ராணுவம் அவ்வப்போது அத்துமீறி தாக்குதல் மேற்கொள்வது வாடிக்கையாகிவிட்டது. இதனால் இருநாட்டு ராணுவ அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்திய போது அதுவும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் பிரிக்ஸ் 15ஆவது மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தென் ஆப்பிரிக்கா சென்றிருந்தார். அங்கு சீனா அதிபர் வந்திருந்தார். இருவரும் சந்தித்து சிறிது நேரம் தனியாக பேசியுள்ளனர். அவர்களது உரையாடல் குறித்து வெளியுறவு செயலர் வினய் மோகன் கூறுகையில், சீன படைகளை இந்தியாவின் லடாக் பகுதியில் இருந்து விலக்கிக் கொள்ளும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது, இருதரப்பினரும் எல்லைப் பிரச்சனையில் அமைதியை நிலை நாட்டுவதன் முக்கியத்துவம், இந்திய – சீன எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதிக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என இரு தலைவர்களும் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.