அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் உள்ள மவுயி தீவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காட்டுத்தீ பரவி ஏராளமான இழப்புகள் ஏற்பட்டது. இந்த காட்டுத்தீக்கு 115 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 1700 களில் உருவாக்கப்பட்ட வரலாற்று சுற்றுலாத்தலமான லஹேனா நகரமும் இந்த காட்டுத்தியில் பாதிக்கப்பட்டது. இந்தக் காட்டு தீ விபத்தினால் 271 கட்டுமானங்களும் 19000 வீடுகள் கடைகள் போன்றவையும் சேதமடைந்துள்ளது. அது மட்டும் இல்லாமல் இந்தியாவில் இருந்து பரிசாக வழங்கப்பட்ட 150 வருட பழமை வாய்ந்த ஆலமரமும் இந்த காட்டுத்தீயில் கருகி உள்ளது. மீட்பு குழுவினர் இந்த காட்டுத்தீயில் சிக்கிய பலரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில் ஏராளமானோர் மாயமாகியுள்ளனர். இந்நிலையில் மாயமானவர்களின் விபர பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது லஹேனா மற்றும் மத்திய பகுதிகளிலிருந்து காணாமல் போன 388 பேர் பற்றிய அடையாளத்தை மத்திய புலனாய்வு அமைப்பாளர் எஃப்பிஐ கண்டறிந்துள்ளது. இதையடுத்து 388 பேரின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.