தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டு கிரீஸ் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடி அங்குள்ள இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அப்போது பேசிய மோடி அவர்கள் சந்திரயான் 3 விண்கலம் மூலமாக முதல் நாடாக இந்தியா நிலவின் தென் துருவத்தில் கால் பதித்துள்ளது. இதன் மூலமாக நம் தேசியக்கொடி நிலவில் ஏற்றப்பட்டுள்ளது. உலகிற்கே இந்தியாவின் திறமை தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு தொடர்ந்து சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருக்கிறது என கூறியுள்ளார். மேலும் கிரீஸ் நாட்டின் உயரிய விருது தனக்கு வழங்கப்பட்டு கவுரவப்படுத்தியதற்கு நன்றி தெரிவித்த மோடி அவர்கள் இந்திய கிரீஸ் இடையேயான உறவு வலிமை வாய்ந்தது என்றும் பழமையானது என்றும் கூறியுள்ளார்.