பருத்தி வயலை ‘தீய கண்ணிலிருந்து’ பாதுகாக்க ஒருவித விசித்திர யுக்தியை மேற்கொண்டுள்ளார் கர்நாடகாவின் யாத்கீர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி. அதாவது முதனூர் கிராமத்தைச் சேர்ந்த அந்த விவசாயி, தனது பருத்தி பயிர் இவ்வாண்டு சிறப்பாக வளர்ந்துள்ளதால், பசுமையாக காட்சியளிக்கும் வயலின் நடுவில் பாலிவுட் நடிகை சன்னி லியோனின் பெரிய அளவிலான பதாகையை நிறுவியுள்ளார். இதன் காரணத்தை ஊடகங்களிடம் விளக்கிய அவர்,
இந்த ஆண்டு என் பருத்தி பயிர் மிகச் சிறப்பாக உள்ளது. இதைப் பார்த்து வழிப்போக்கர்கள் அல்லது கிராமவாசிகள் பொறாமைப்படக் கூடாது. அவர்களின் கவனம் பயிரில் விழாமல் திசைதிருப்ப சன்னி லியோனின் படத்தை வைத்துள்ளேன். இவ்வாறு வைத்தால் ‘தீய கண்ணிலிருந்து’ பயிர் காப்பாற்றப்படும்” என்று தெரிவித்தார்.
View this post on Instagram
சன்னி லியோனின் புகைப்படத்தை ‘பயிர் காவலர்’ போல பயன்படுத்துவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பு ஆந்திர பிரதேசத்தின் பண்டா கிண்டி பல்லே கிராமத்திலும், காலிஃபிளவர் மற்றும் முட்டைக்கோஸ் பயிர்களை பாதுகாக்க இதேபோன்ற முறையில் ஒரு விவசாயி பதாகை வைத்தது குறிப்பிடத்தக்கது.
