சமூக வலைதளங்களில் ஒரு அதிசய வீடியோ வைரலாகி வருகிறது. அதில், ‘அலுமினியத்தின் மரணம்’ என்று வர்ணிக்கப்படும் ஒரு உலோகம் குறித்துக் கூறப்பட்டுள்ளது. அந்த உலோகம், கால்லியம் ஆகும். வெறும் ஒரே ஒரு துளி கால்லியம் உலோகம், திடமான அலுமினியப் பூட்டைக்கூட முற்றிலும் சேதப்படுத்துவதை அந்த வீடியோவில் காணலாம். இந்த உலோகம், அலுமினியத்தின் மேலுள்ள பாதுகாப்பு ஆக்சைடு அடுக்கை ஊடுருவிச் சென்று, அதன் உள்ளமைப்பைக் குலைத்து, அலுமினியத்தை உடனடியாக மென்மையாகவும் பலவீனமாகவும் மாற்றிவிடுகிறது. இந்தச் செயல்பாடு பார்ப்பதற்கு அலுமினியத்தின் ‘இறுதிச் சடங்கு’ போலத் தோன்றுகிறது என்று நெட்டிசன்கள் ஆச்சரியத்துடன் கருத்து தெரிவிக்கின்றனர்.
View this post on Instagram
