இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இன்று பிறந்த நாளை கொண்டாடிவரும் நிலையில் அவருக்கு திரையுலகை சேர்ந்த முன்னணி பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே காஷ்மீரின் தற்போது லியோ படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.அவ்வப்போது பட குழு அப்டேட்டுகளை வெளியிட்ட விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் விஜய்க்கு நன்றி தெரிவித்து அவருடன் இருக்கும் சமீபத்திய புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்து உள்ளார். மேலும் லியோ படத்தில் வில்லனாக நடிக்கும் சஞ்சய் தத் தெரிவித்த வாழ்த்துக்கள் நன்றி என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். தற்போது லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.