ஒரு பெண் இன்ஸ்டாகிராமில் பேசிய காணொளி வைரலாகியுள்ளது. அதில், அவர் மிக எளிமையாகவும் ஆழமாகவும் ஒரு முக்கியமான கருத்தை விளக்கியுள்ளார். பழங்காலத்தில், தச்சன் நாற்காலி செய்தான், குயவன் பானை செய்தான் என்று மரியாதை குறைவாகச் சொல்லப்பட்டது. ஆனால், ஐயர் பூஜை செய்தார் என்று மரியாதையுடன் குறிப்பிடப்பட்டது. இதில் ஜாதிய வேறுபாடு நுட்பமாகப் பதிந்திருந்தது. இந்த ஜாதி அடிப்படையிலான மொழி வேறுபாட்டைக் களைய, 1975இல் தமிழ்நாட்டில் “ர்” தீர்மானத்தை நிறைவேற்றியவர் நமது முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி. இந்தத் தீர்மானம் மொழியில் மரியாதையைக் கொண்டுவந்து, அனைத்து தொழில்களையும் சமமாக மதிக்க வைத்தது.
இன்று நாம் புத்தகங்களில் தச்சர், குயவர், வண்ணார், உழவர் போன்ற சொற்களை மரியாதையுடன் பயன்படுத்துவதற்கு கலைஞரின் இந்த முயற்சியே காரணம். அவர் இந்த மாற்றத்தை சமூகத்தில் கொண்டுவந்ததால், அவரை நாம் “கலைஞர்” என்று மரியாதையுடன் அழைக்கிறோம். ஆனால், அவருடைய சித்தாந்த எதிரிகள் அவரை வெறும் பெயர் சொல்லி அழைப்பது, அவரது பங்களிப்பை மறைக்கவோ அல்லது மறுக்கவோ முயல்வதாகவே புரிந்து கொள்ள வேண்டும். கலைஞரின் இந்த மாற்றம், சமூக நீதிக்கு அவர் ஆற்றிய பெரும் பங்களிப்பை நமக்கு உணர்த்துகிறது.
