
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வரதாபுரம் கிராமத்தில் சந்தோஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி லோகேஸ்வரி (26). இவர் நேற்று தன்னுடைய வீட்டின் தோட்டத்தில் உள்ள எலுமிச்சை மரத்திலிருந்து எலுமிச்சை பழத்தை பறிப்பதற்காக சென்றுள்ளார். அவர் வீட்டின் மாடியில் இருந்த ஒரு இரும்பு கம்பியின் மீது ஏறி பழத்தை பறித்தார். அப்போது ஒரு மின்சார கம்பி மீது பழத்தை பறிப்பதற்காக லோகேஸ்வரி வைத்திருந்த இரும்பு கம்பிப்பட்டது. இதில் மின்சாரம் தாக்கி லோகேஸ்வரி கீழே விழுந்த நிலையில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையில் செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டார்.
இந்நிலையில் அவருடைய உறவினர்கள் தாழ்வான மின்கம்பியை அகற்ற பலமுறை கோரிக்கை விடுத்தம் அவர்கள் செய்யாததால் தான் லோகேஸ்வரி உயிரிழந்ததாக கூறி திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் அதன் பிறகு சம்பவம் குறித்து கேள்விப்பட்ட காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு அங்கிருந்து கலைந்து சென்றனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.