
தற்போது சமூகவளைத்தளத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ஊர் மக்கள் ஒன்றுகூடி நிற்க ஒரு எருமை மாட்டை நடுவில் நிற்கவைத்து அதன் கொம்பில் தீயை பற்ற வைத்துள்ளனர். இது ஏதோ சம்பிரதாய விளையாட்டு போன்று தெரிகிறது. ஊர்மக்கள் இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க ஒரே ஒருநபர் மட்டும் கொம்பில் தீ எரிந்து கொண்டிருக்கும் எருமை மாடு முன் நின்று கொண்டு என்னிடம் வந்து மோதிப்பார் என்ற ரீதியில் ஆட்டம் போடுகிறார்.
மேலும் அந்த எருமை மாட்டிடம் சென்று வேண்டாத வீராப்பு காட்டிக்கொண்டிருக்கிறார். உடனே அந்த நபர் சுதாரிப்பதற்குள் ஜெட் வேகத்தில் ஓடிச் சென்று தூக்கி பறக்கவிடுகிறது. அதன்பின் இன்னொருவர் ஓடி வந்து எருமை மாடு திரும்பி வருவதற்குள் அந்நபரை காப்பாற்றி தூக்கி செல்கிறார்.
— Out of Context Human Race (@NoContextHumans) April 26, 2023