அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், மூத்த நிர்வாகியுமான கே.ஏ. செங்கோட்டையன், இன்று (நவ. 26) தனது சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ.) பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் என்று தகவல் வெளியாகி உள்ள நிலையில், இதுகுறித்து திமுக நிர்வாகி அன்வர் ராஜா கருத்துத் தெரிவித்துள்ளார்.

அவர் பேசுகையில், “செங்கோட்டையன் திமுகவில் இணைவார் என்று நான் நம்புகிறேன். அவரது உழைப்பு திராவிட இயக்கத்திற்குப் பயன்பட்டால் மிகவும் சிறப்பாக இருக்கும்” என்று விருப்பம் தெரிவித்துள்ளார். அன்வர் ராஜாவும் சமீபத்தில்தான் அதிமுகவில் இருந்து விலகி, திமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில், செங்கோட்டையன் மீது அன்வர் ராஜா காட்டும் ஆர்வம், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
