கடந்த 1975-ல் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் அறிவிக்கப்பட்ட எமர்ஜென்சியின் 48-வது ஆண்டு நிறைவை குறிக்கும் அடிப்படையில் பிரதமர் நரேந்திர மோடி, அவரது மூத்த கட்சி மற்றும் அமைச்சரவை சகாக்கள் பலர் இன்று “எமர்ஜென்சியின் கருப்பு நாட்களை” எதிர்த்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் பிரதமர் மோடி வெளியிட்டிருக்கும் டுவிட்டர் பதிவில், எமர்ஜென்சியை எதிர்த்து நம் ஜனநாயக உணர்வை வலுப்படுத்த உழைத்த துணிச்சல் மிக்கவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன். எமர்ஜென்சியின் கருப்பு நாட்கள் இந்திய வரலாற்றில் மறக்க முடியாத காலக்கட்டம் ஆகும். அதோடு ஜனநாயக விழுமியங்களை பாதுகாக்க எமர்ஜென்சியை எதிர்த்து போராடியவர்களுக்கு மரியாதை என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்..