சிஎஸ்கே அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் மோஹித் ஷர்மா, ‘கேப்டன் கூல்’ என அழைக்கப்படும் மகேந்திரசிங் தோனியுடன் சம்பந்தப்பட்ட மறக்க முடியாத ஒரு அனுபவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

சாம்பியன்ஸ் லீக் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிராக விளையாடியபோது, தோனி வேறு பந்துவீச்சாளரை பந்து வீச அழைத்தார். ஆனால் தவறாக புரிந்துகொண்ட மோஹித் ஷர்மா, தான் அழைக்கப்பட்டதாக நினைத்து பந்து வீசி விட்டார். இதனால், பொதுவாக அமைதியாக இருப்பவர் என அழைக்கப்படும் தோனி, அந்த தருணத்தில் கோபமடைந்து கண்டபடி திட்டியதாக மோஹித் கூறியுள்ளார்.

அதே நேரத்தில், அந்த முதல் பந்திலேயே அவர் விக்கெட் எடுத்து கொண்டார். ஆனால், விக்கெட் விழுந்த மகிழ்ச்சியில் அவர் கொண்டாடிக்கொண்டிருக்கும் போதும், தோனி மோசமான வார்த்தைகளில் திட்டிக் கொண்டே இருந்தார் என மோஹித் சிரித்தபடி பகிர்ந்துள்ளார்.

“கேப்டன் கூல் தோனிக்கும் சில சமயங்களில் கட்டுப்பாட்டை இழக்கும் தருணங்கள் உண்டு” என்று கூறிய அவர், அந்த சம்பவம் தான் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் நினைவில் நிற்கும் அனுபவமாக இருந்தது என தெரிவித்துள்ளார்.