பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் ஆன பூஷன் சரண்சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்திருந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மல்யுத்த வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரியில் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த போராட்டம் இந்திய அளவில் கவனம் எடுத்த நிலையில் பூஷன் சரண் சிங் மீது போக்சோ உள்ளிட்ட இரண்டு பிரிவுகள் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஏப்ரல் 23ஆம் தேதி முதல் மல்யுத்த வீரர் மற்றும் வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதனிடையே புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவின் போது தங்களுக்கு நீதி வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் புதிய நாடாளுமன்றத்தை நோக்கி ஊர்வலமாக சென்ற போது அவர்களை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்து சென்றது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இந்நிலையில்  என் மீதான ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டால் என்னை நானே தூக்கிட்டுக் கொள்கிறேன் என்று மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக MPயுமான ப்ரிஜ் பூஷன் சிங் பேசியிருக்கிறார்.  ஆதாரத்தை நீதிமன்றத்தில் கொடுங்கள். தண்டனையை ஏற்கத் தயாராக இருக்கிறேன்” என்று அவர் பேசியிருக்கிறார்.