பீகார் மாநிலத்தில் கடந்த புதன்கிழமை (ஜூன் 17, 2026) அன்று பாரத் பூஷன் திவாரி என்ற 28 வயது இளைஞர் போலீஸ் என்கவுண்டரில் உயிரிழந்த சம்பவம் தற்பொழுது மாநிலம் முழுவதும் பெரும் விவாதத்தையும் அரசியல் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இது ஒரு திட்டமிடப்பட்ட போலி என்கவுண்டர் என்று உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினரும், உள்ளூர் மக்களும் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த நிலையில், இந்த விவகாரத்தில் பீகார் மாநில அரசு தற்பொழுது அதிரடியாக நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

அரசின் இந்த அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி, நேரில் சென்று உயிரிழந்த பாரத் பூஷன் திவாரியின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மை நிலவரங்கள் குறித்து தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளார்.

 

“>

காவல்துறையின் இந்த செயல்பாட்டில் மறைந்திருக்கும் மர்மங்களை வெளிக்கொண்டு வர நீதி விசாரணை தொடங்கப்பட்டுள்ள இந்த விவகாரம், தற்பொழுது எக்ஸ் தளம் உள்ளிட்ட சோசியல் மீடியாக்களில் பேசுபொருளாக மாறி ஒட்டுமொத்த பீகாரையும் உலுக்கி வருகிறது.