தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் நர்சிங் மாணவி சீதாலட்சுமி உயிரிழந்ததாகக் கூறி, அவரது மரணத்திற்கு நீதி கேட்டு சக நர்சிங் மாணவ, மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கல்லூரி நிர்வாகமோ அல்லது அரசோ ஏதேனும் நடவடிக்கை எடுக்குமா, அவர்கள் தங்கள் குறைகளை யாரிடம் போய் சொல்வார்கள் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் ரமேஷ் அதிரடியான பதிலை அளித்துள்ளார்.
மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்தா, அவங்க யார்கிட்ட போய் குறை சொல்லுவாங்க??
– Press
“மொத்த Students சார்பா 2 பேர்கிட்ட என்னோட personal number-ஏ கொடுத்திருக்கேன்,எதுவா இருந்தாலும் நேரடியாக call பண்ண சொல்லியிருக்கேன்,அவங்களோட educationக்கும் எந்த பிரச்சனையும் வராது"
@RameshOffcl pic.twitter.com/pGrCKWMuV3
— Dharshini S (@Dharshini_tvk) May 23, 2026
போராட்டம் நடத்திய மாணவர்களின் கல்விக்கோ அல்லது எதிர்காலத்திற்கோ எந்தவொரு பாதிப்பும், பிரச்சனையும் வராது என்று அமைச்சர் திட்டவட்டமாக உறுதி அளித்துள்ளார். மேலும், மொத்த நர்சிங் மாணவர்கள் சார்பாக இரண்டு பேரிடம் தனது சொந்த கைபேசி எண்ணையே (Personal Number) நேரடியாகக் கொடுத்துள்ளதாகவும், கல்லூரியிலோ அல்லது கல்விக்கோ ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் தன்னிடம் நேரடியாகவே அழைத்துச் சொல்லலாம் என்றும் கூறி மாணவர்களின் பாதுகாப்பிற்கு அமைச்சர் ரமேஷ் முழு உத்தரவாதம் கொடுத்துள்ளார்!
