திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த ஒரு பத்து வயது சிறுமி தன் பாட்டி வீட்டில் தங்கி இருந்து அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி கடந்த 12ஆம் தேதி மதியம் பள்ளி முடிந்து வீட்டிற்கு தனியாக நடந்து சென்று கொண்டிருந்த நிலையில் அதனை பார்த்து நோட்டமிட்ட ஒரு மர்ம நபர் சிறுமியின் பின்னால் சென்று வலுக்கட்டாயமாக சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தார்.
அந்த சிறுமி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 5 நாட்களைக் கடந்தும் இன்னும் அந்த குற்றவாளி கைது செய்யப்படவில்லை. போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்து குற்றவாளியை வ லைவீசி தேடி வருகின்றனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் தற்போது கண்ணீர் மல்க பேட்டி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, பள்ளி முடிந்து என் மகள் பாட்டி வீட்டிற்கு சென்ற போது கட்டாயமாக ஒருவன் தூக்கி சென்றான். என் மகள் என்னை விட்டுறுங்க கஷ்டப்படுத்தாதீங்க ரொம்ப வலிக்குது என கதறி அழுததும் அவன் அழக்கூடாது என மிரட்டி வாயை அடித்து உடைத்து ரத்தம் வர வைத்தான்.
வாயெல்லாம் ரத்தம் வர வைத்து என் மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இன்னும் அவனை யாருன்னு அடையாளம் கண்டுபிடித்து கைது செய்யல. போலீசார் அவனை கண்டதும் சுட்டுக் கொல்லனும். என் மகளுக்கு நடந்தது போல் வேறு யாருக்கும் நடக்கக்கூடாது என்று கூறினார். மேலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
