வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பாயம் உத்தரவிட்ட நிலையில், அவரது மகனும், ஆலோசகருமான சஜீப் வாஜெட், இடைக்காலத் தலைவர் முகமது யூனுஸ் குறித்து கடுமையான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் நாடுகடத்தப்பட்டு இருக்கும் ஷேக் ஹசீனாவுக்கு எந்தத் தீங்கும் இழைக்க முடியாது என்றும், “யூனுஸ் என் தாயைத் தொடவோ, அவருக்கு எதையும் செய்யவோ முடியாது” என்றும் சஜீப் வாஜெட் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
Watch: When asked if Muhammad Yunus is trying to kill ousted Bangladesh PM Sheikh Hasina following the death sentence pronounced against her, her son Sajeeb Wazed says, “No, they will not be able to kill her. How are they actually going to execute the verdict? First of all, they… pic.twitter.com/OTPlDeFaeg
— IANS (@ians_india) November 20, 2025
“>
மேலும், தனது தாய்க்குக் கொடுக்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்பு, சட்டவிரோதமானது, அரசியலமைப்புக்கு எதிரானது மற்றும் ‘நீதிக்கான ஒரு கேலிக்கூத்து’ என்று குற்றம் சாட்டிய அவர், இந்தத் தீர்ப்புச் சட்டரீதியான செயல்முறை மீண்டும் வந்தவுடன் நீக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்தார். அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற யூனுஸ், வங்கதேசத்தை தோல்வியுற்ற இஸ்லாமிய பயங்கரவாத நாடாக மாற்றி வருவதாகவும் சஜீப் வாஜெட் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும் எனது தாய் உயிரை காப்பாற்றியதற்கு இந்தியாவிற்கு நன்றி..!! என தெரிவித்துள்ளார்.
