பெங்களூரை சேர்ந்த 70 வயது முதியவர் முனிகிருஷ்ணப்பா, போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருந்த நிலையில், அவற்றின் ஒரு பகுதியைத் தனது பேரக்குழந்தைகளின் பெயரில் உயில் எழுதி வைத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அவரது மகன்கள் மோகன் குமார் மற்றும் கஜேந்திரா ஆகிய இருவரும், சொத்துக்களைத் தங்கள் பெயருக்கு எழுதித் தருமாறு கூறி தந்தையிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளனர்.கடந்த 14-ஆம் தேதி முனிகிருஷ்ணப்பா சாலையில் நடந்து சென்றபோது, அவரை வழிமறித்த மகன்கள் மீண்டும் சொத்து கேட்டுத் தகராறு செய்துள்ளனர்.

தந்தை மறுக்கவே, ஆத்திரமடைந்த இருவரும் அவரை ஹாக்கி மட்டை மற்றும் இரும்பு கம்பியால் சரமாரியாகத் தாக்கிவிட்டு, கத்தியால் குத்திவிட்டுத் தப்பினர். இதில் படுகாயமடைந்த முனிகிருஷ்ணப்பா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், மகன் மோகன் குமாரைக் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றொரு மகனைத் தேடி வருகின்றனர்.