தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் பிரேம்ஜி. இவர் கடந்த வருடம் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் படங்களில் தான் பிரேம்ஜி அதிகமாக நடித்திருக்கிறார். இந்நிலையில் நடிகர் பிரேம்ஜி நேற்று தன்னுடைய 44-வது பிறந்த நாளை கொண்டாடினார். நடிகர் பிரேம்ஜியின் பிறந்தநாளுக்கு பாடகி வினைட்டா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் தன்னுடைய வலைதள பக்கத்தில் நடிகர் பிரேம்ஜியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்ல குட்டி. நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். மேலும் இதற்கு முன்பாக என் புருஷனோடு நான் சேர்ந்து விட்டேன் என்று நடிகர் பிரேம்ஜியுடன் இருக்கும் புகைப்படத்தை வினைட்டா வெளியிட்டிருந்த நிலையில் தற்போது பிரேம்ஜி உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்‌