பாகுபலி-2, புஷ்பா, கேஜிஎப்-2, ஆர்ஆர்ஆர் போன்ற திரைப்படங்களின் வெற்றி ஹிந்தி திரையுலகத்தை அதிரவைத்தது. மேலும் பாலிவுட் ரசிகர்களுக்கு தென் இந்திய படங்கள் மீதான ஆர்வத்தை அதிகரிக்க வைத்தது. இதனால் ஹிந்திப் படங்களையும் தென் இந்திய படங்கள் போல எதிர்பார்க்க ஆரம்பித்தார்கள். அதன் விளைவாக சென்ற சில வருடங்களாக வெளிவந்த பல்வேறு முக்கிய நடிகர்கள் நடித்த ஹிந்தித் படங்கள் படுதோல்வி அடைந்தது.

10 தினங்களுக்கு முன் வெளியான “அலா வைகுந்தபுரம்லோ” படத்தின் ஹிந்தி ரிமேக்கான “ஷெஸதா” திரைப்படமும், 2 நாட்களுக்கு முன் வெளியான மலையாள படமான “டிரைவிங் லைசென்ஸ்” படத்தின் ஹிந்தி ரீமேக்கான “செல்பி” படமும் படுதோல்வி அடைந்துள்ளது. இந்த 2 படங்களுமே 100 கோடி வரை செலவு செய்து எடுக்கப்பட்ட படங்கள் ஆகும். பெரும் வெற்றியடைந்த தென்னிந்திய படங்களை ரீமேக் செய்து எடுக்கப்படும் ஹிந்தி படங்களை கூட ரசிகர்கள் புறக்கணித்து விட்டனர். இதன் காரணமாக செய்வதறியாது திணறி வருகிறது பாலிவுட்.