தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலிப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் சைரன், மாமன்னன், ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா, தசரா, போலோ சங்கர் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். நடிகர் நானி நடிப்பில் உருவாகும் தசரா திரைப்படத்தில் ஹீரோயின் ஆக கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் நிலையில் அந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தசரா படத்தின் படப்பிடிப்பு தளத்தில் வைத்து நடிகர் நானியுடன் பேட்மிண்டன் விளையாடிய வீடியோவை தற்போது தன் வலைதள பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். மேலும் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருவதோடு லைக்ஸ்களையும் குவித்து வருகிறது.