பிக்பாஸ் டைட்டில் வின்னர் அசீம் எந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்றாலும் பல்பு வாங்கி வருகிறார். அதன்படி விஜய் டிவியின் காமெடி ஷோவான ஊ சொல்றியா? ஊஊ சொல்றியா? நிகழ்ச்சியில் இந்த வாரம் அசீம், தனலெட்சுமி ஆகிய இரண்டு பேரும் கலந்துகொண்டுள்ளனர். அப்போது குரேஷி, அசீமை பார்த்து “நீங்கள் அருமையான அயோக்கியன்” என கேலி செய்கிறார்.

இதனால் கடுப்பான அசீம் குரேஷி அருகில் போகிறார். அப்போது மீண்டும் விக்ரமன்ஸ் பேன்ஸ் மீட்டிங்கில் கடைசி வரிசையில் தனியா உட்கார்ந்து வந்தீங்களாமே என அசீமை கலாய்க்கிறார் குரேஷி. அதன்பின் குரேஷி அதனை சமாளித்து காமெடியாக மாற்றி விட்டாலும், அவர் அசீமை வறுத்தெடுத்த அந்த புரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.