தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் பிரகாஷ்ராஜ். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் அதிக அளவில் நடித்து வருகிறார். வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் பிரகாஷ்ராஜ் அண்மையில் விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார். நடிகர் விஜய் மற்றும் பிரகாஷ்ராஜ் நடித்த கில்லி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு வில்லு திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ் விஜய்க்கு வில்லனாக நடித்திருந்தார்.

இந்த படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 13 வருடங்கள் கழித்து வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக பிரகாஷ்ராஜ் நடித்ததால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்தது என்றே சொல்லலாம். இந்நிலையில் வாரிசு திரைப்படத்தில் நடிப்பதற்கு பிரகாஷ்ராஜ் வாங்கிய சம்பளம் குறித்த விவரம் வெளிவந்துள்ளது. அதன்படி நடிகர் பிரகாஷ்ராஜ் ஒரு கோடி வரை சம்பளமாக வாங்கியுள்ளாராம். மேலும் கடந்த மாதம் வெளியான வாரிசு திரைப்படம் 300 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.