
தஞ்சாவூரை சேர்ந்த இளம் பெண் ஒருவர் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்துள்ளார். இவரது முதல் கணவன் கடந்த 2021 ஆம் ஆண்டு இறந்துவிட்டார். அதன் பின் இந்த இளம் பெண் மறுமணம் செய்து கொள்வதற்காக திருமண தகவல் இணையதளத்தில் பதிவு செய்துள்ளார். இதனைப் பார்த்த வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் அந்த பெண்ணிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் ஏற்கெனவே ஒரு பெண்ணுடன் திருமணம் ஆகி விவாகரத்து ஆகிவிட்டதாகவும், தற்போது அவரை திருமணம் செய்ய விரும்புவதாகவும் கூறினார்.இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அவர்களது திருமணம் நடைபெற்றது. பின்னர் சில நாட்கள் கழித்து வேலைக்காக அவர் சவுதி அரேபியாவுக்கு சென்ற நிலையில் 3 மாதங்களுக்கு ஒரு முறை இந்தியா வருவார்.
அப்போது அவர் வீட்டிற்கு கூட்டிச் செல்லாமல், சென்னை, பெங்களூர் போன்ற இடங்களுக்கு கூட்டிச்செல்வார். இதுகுறித்து அவரிடம் அந்த பெண் கேட்டபோது, அவருடைய பெற்றோருக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்று தெரிவித்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அவர் அந்த பெண்ணின் செல்போன் அழைப்பை எடுக்கவில்லை. அதனால் குடியாத்தம் சென்று அவரைப் பார்க்க முயற்சித்துள்ளார். ஆனால் அவரது குடும்பத்தினர் பார்க்க விடாமல் தடுத்து நிறுத்தினர். அதன் பிறகு அவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்யப் போவதாக கூறி அந்த பெண்ணுடன் நெருக்கமான எடுத்த போட்டோவை அவருக்கு அனுப்பி வைத்தார். இது குறித்த தகவல் அறிந்த அந்த பெண் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் படி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.