மேற்கு வங்க மாநிலம் ரயில் நிலையத்தில், நடைமேடையில் நின்றுகொண்டிருந்த வாலிபர் ஒருவர் திடீரென அதிவேகமாக வந்துகொண்டிருந்த ரயிலின் முன்பாகத் தண்டவாளத்தில் குதித்துத் தற்கொலைக்கு முயன்ற நெஞ்சைப் பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்தச் சமயத்தில் அங்குப் பணியில் இருந்த ஆர்.பி.எஃப் பெண் காவலர் கே. சுமதி,‌ நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து நொடிப் பொழுதில் தண்டவாளத்தில் குதித்து, தன் உயிரையும் பொருட்படுத்தாமல் ஓடிச் சென்று அந்த இளைஞரை இழுத்துக் காப்பாற்ற முயன்றுள்ளார்.

இதனைப் பார்த்த அங்கு நின்றிருந்த சக பயணிகளும் உடனடியாக ஓடி வந்து உதவ, சில நொடிகள் இடைவெளியில் அந்த இளைஞர் மரணத்தின் பிடியிலிருந்து பத்திரமாக மீட்கப்பட்டார்.

 

“>

சில வினாடிகள் தாமதித்திருந்தாலும் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும் என்ற நிலையில், சமயோசிதமாகச் செயல்பட்டு ஒரு உயிரைக் காப்பாற்றிய பெண் காவலர் கே. சுமதியின் அசாத்திய தைரியத்தை பாராட்டி இணையத்தில் நெட்டிசன்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை அள்ளிக்குவித்து வருகின்றனர்.