ஆப்பிள் வாட்ச் மூலமாக சிங்கத்தின் இதயத் துடிப்பை அறிந்து கொள்ளும் புதிய முறையை கண்டறிந்து ஆஸ்திரேலியா கால்நடை மருத்துவர்கள் அசத்தியுள்ளார்கள். இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் அசுரர் வேகத்தில் வளர்ந்து வருகிறது. தொழில்நுட்பம் வளர வளர பல்வேறு புதிய புதிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் சிங்கத்தின் நாக்கில் வாட்சைக் கட்டி இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது .இதன் மூலமாக ஆபத்தான வனவிலங்குகளின் இதய துடிப்பை சுலபமாக கண்டறிந்து அதற்கு சிறந்த பராமரிப்பு அளிக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்,
