டெல்லி மெட்ரோவில் நடந்த ஒரு சண்டையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், ஒரு இளைஞனும் ஒரு முதியவரும் கடுமையாக சண்டையிடுவதைக் காணலாம். இவர்கள் ஒருவரையொருவர் கெட்ட வார்த்தைகளால் திட்டிக்கொண்டதால் இந்த மோதல் தொடங்கியதாகத் தெரிகிறது. வீடியோவில், இளைஞன் முதியவரை கெட்ட வார்த்தைகளால் திட்டியதாக குற்றம்சாட்டி அவரது காலரைப் பிடிக்கிறான். இதனால் கோபமடைந்த முதியவர், இளைஞனை உதைத்து கீழே தள்ளுகிறார். பின்னர், இளைஞனின் நண்பர் முதியவரின் தலைமுடியைப் பிடித்து இழுக்க, இருவரும் சேர்ந்து முதியவரைத் தாக்குகின்றனர்.
Kalesh b/w Uncle and a guy inside delhi metro. pic.twitter.com/xt6NMKi5F1
— Ghar Ke Kalesh (@gharkekalesh) October 2, 2025
இந்த திடீர் சண்டையால் மெட்ரோவில் இருந்த பயணிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது. சிலர் இந்த சண்டையை நிறுத்த முயன்றனர், ஆனால் இளைஞன் “என் தாயை திட்டினாயா?” என்று கோபமாக கத்திக்கொண்டே இருந்தான். இந்த சம்பவத்தை மற்றொரு பயணி வீடியோவாக பதிவு செய்து, @gharkekalesh என்ற எக்ஸ் கணக்கில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ எந்த மெட்ரோ பாதையில் எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை, இதற்க்கு டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (DMRC) இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. பயனர்கள் இதைப் பார்த்து, “முதியவரின் ஒரு உதை இளைஞனை தோற்கடித்தது” என்று நகைச்சுவையாக கருத்து பகிர்ந்துள்ளார்.
