புது தில்லியில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், ஒரு மயில் விபத்தில் காயமடைந்தது. ஆனால், அதைக் கண்ட கிராமவாசிகள், மயிலை காப்பாற்றுவதற்கு பதிலாக, அதன் இறகுகளை பறித்து சென்றனர். இந்தியாவின் தேசிய பறவையான மயிலை இப்படி கொடூரமாக நடத்திய சம்பவம் பதிவு செய்யப்பட்டு, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு வாகனம் மயிலை இடித்து விட்டதால், அது கடுமையாக காயமடைந்து, நகர முடியாமல் சாலையில் விழுந்து கிடந்தது. அப்போது அங்கு வந்த சிலர், மயிலை காப்பாற்றாமல், அதன் அழகிய இறகுகளை பறித்து சென்றனர். இந்த சம்பவம் எந்த இடத்தில் நடந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
Look at the behavior of people—this peacock, our national bird, has died, and people are stealing its wings. Even after death, cruelty continues.
This is the heartbreaking reality for animals in our country. Do they even have rights? We must do better. #AnimalRights… pic.twitter.com/ZrzBhAgoK4
— Vidit Sharma 🇮🇳 (@TheViditsharma) September 13, 2024
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால், இணையவாசிகளும், விலங்கு நேசிப்பவர்களும் கடும் கோபம் அடைந்தனர். தேசிய பறவையான மயிலை இவ்வாறு கொடூரமாக நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம், மயிலை காப்பாற்ற வேண்டிய மனிதாபிமானத்திற்கு பதிலாக, மனிதர்களின் பேராசையையும், உணர்வற்ற செயலையும் காட்டுகிறது.
