இந்தியச் சட்டப்படி 18 வயது பூர்த்தியடையாதவர்கள் வாகனங்களை இயக்குவது சட்டப்படி குற்றமாகும். இது ஓட்டுநருக்கும், பிறருக்கும் பெரும் ஆபத்தை விளைவிக்கக்கூடியது. இத்தகைய சூழலில், சிறுவன் ஒருவன் வயலில் டிராக்டரைத் தத்ரூபமாக இயக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் பரவி வரும் 26 விநாடி கொண்ட அந்த வீடியோவில், ஒரு சிறுவன் எவ்வித அச்சமுமின்றி வயலில் டிராக்டரை ஓட்டி உழுதுகொண்டிருக்கிறான். அவனது கையாளுதல் முறை மற்றும் வேகம் ஆகியவை ஏதோ ஒரு அனுபவம் வாய்ந்த ஓட்டுநரைப் போலவே காணப்படுகிறது. ஆனால், அந்தச் சிறுவனின் வயதுக்கும், அந்த வாகனத்தின் எடை மற்றும் விசைக்கும் இடையே உள்ள முரண்பாடு காண்போரை அதிர வைத்துள்ளது.
இந்த வீடியோவை எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்துள்ள பயனர் ஒருவர், “இது என்ன கட்டாயமா? அல்லது இது ஒரு பொழுதுபோக்கா? சிறுவர்களை வைத்து இது போன்ற வேலைகளைச் செய்வது அவசியமா? உயிரை விட இது முக்கியமா?” என்று சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
🚨Be alert
क्या मजबूरी है या कौनसा ये शौक
इस बच्चों से क्या जरूरी है गाड़ी चलानाआए दिन बहुत घटनाएं होती जा रही हैं…
जान प्यारा है या दिखावा??? pic.twitter.com/ZWnvSCaubt— Manoj Yadav (@memanoj24) February 4, 2026
இந்த வீடியோவைப் பார்த்த பலரும் சிறுவனை இத்தகைய ஆபத்தான செயல்களில் ஈடுபடுத்த அனுமதித்த பெற்றோர்களுக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். “குழந்தைகளுக்கு வாகனம் ஓட்டக் கற்றுக்கொடுப்பது உயிருக்கே ஆபத்தானது. சட்ட விதிகளைக் கடைபிடிப்பதே உண்மையான பாதுகாப்பு” என்று பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
மேலும் சிறுவர்கள் விளையாட்டுத்தனமாகச் செய்யும் இத்தகைய செயல்கள், ஒரு நொடித் தவறினால் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால், பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
