பாட்டிக்குத் தெரியாமல் வெளியே வந்த சுட்டிக்குழந்தை ஒன்று, கதவு தானாகப் பூட்டிக்கொண்டதால் தனியாகச் சிக்கித் தவித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

அந்த வீடியோவில், வீட்டை விட்டு வெளியே வந்த பாட்டி, குழந்தை உள்ளே இருப்பதாக நினைத்துக் கதவைச் சாத்திவிட்டுச் செல்கிறார். ஆனால், அவருக்குத் தெரியாமல் வெளியே வந்த அந்தச் சிறுவன், கதவைத் திறக்க முடியாமல் கதறி அழுதுள்ளான். தான் ஆபத்தில் இருப்பதை உணர்ந்த அந்தச் சிறுவன், அழுதுகொண்டே இருக்காமல், மேல்தளத்திலிருந்து கீழே இறங்கி வந்த மற்றொரு பாட்டியைப் பார்த்துத் தனது கைகளால் சைகை காட்டி உதவி கோரியுள்ளான்.

“>

 

அந்தப் பெரியவர் உடனடியாக ஓடிவந்து குழந்தையை மீட்டதுடன், அவனது பாட்டியையும் அழைத்துச் சமாதானப்படுத்தினார். “குழந்தைகளை ஒரு நொடி கூடக் கண் இமைக்காமல் கண்காணிக்க வேண்டும்; சிறு கவனக்குறைவு கூடப் பெரிய விபரீதத்தை ஏற்படுத்திவிடும்” என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சாட்சியாக அமைந்துள்ளதாக இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.