அமெரிக்காவின் கோடீஸ்வர நிதி ஆலோசகரும், பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவருமான ஜாஃப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019-ம் ஆண்டு சிறையில் தற்கொலை செய்து கொண்டது சர்வதேச அளவில் பெரும் மர்மமாகப் பார்க்கப்பட்டது.
அவரது மரணம் குறித்துப் பல சதித் திட்டக் கோட்பாடுகள் (Conspiracy theories) உலவி வந்த நிலையில், சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் சிறையில் கைப்பட எழுதியதாகக் கூறப்படும் தற்கொலை கடிதத்தை நியூயார்க் நீதிமன்றம் தற்போது வெளியிட்டுள்ளது.
எப்ஸ்டீனின் அறையில் அவருடன் இருந்த முன்னாள் போலீஸ் அதிகாரி நிக்கோலஸ் என்பவரால் கண்டெடுக்கப்பட்ட இந்தக் கடிதத்தில், “மாதக்கணக்கில் என்னைப் பற்றி விசாரித்தும் அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை!” என்றும், “விடைபெறுவதற்கான நேரத்தை நானே தேர்ந்தெடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றும் ஆவேசமாகவும், சவாலாகவும் சில வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
BREAKING: Jeffrey Epstein’s alleged su*cide note has been released, according to the New York Times.
The outlet says they were *not* able to authenticate that Epstein wrote it.
“They investigated me for months — FOUND NOTHING!!!” the note read.
“It is a treat to be able to… pic.twitter.com/upZ2Rc5SjM
— Collin Rugg (@CollinRugg) May 6, 2026
மேலும், “இதில் எந்தப் பயனும் இல்லை” (NOT WORTH IT!!) என அடிக்கோடிட்டு அவர் எழுதியுள்ள வார்த்தைகள், அவர் எந்த அளவுக்கு மன உளைச்சலில் இருந்தார் என்பதைக் காட்டுகிறது.
பாலியல் கடத்தல் வழக்கில் பல விஐபி-க்களின் பெயர்கள் வெளியே வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தக் கடிதத்தின் வெளியீடு மீண்டும் சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதன் மூலம் எப்ஸ்டீனின் மர்ம மரணம் தொடர்பான விவாதங்கள் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.
