சேலம் பரப்புரைக் கூட்டத்தில் நடிகர் விஜய் குழந்தைகளை “குட்டி நண்பா நண்பிகளே” என்று அழைத்து, அவர்களை நோக்கி உருக்கமாக உரையாற்றியது அங்கிருந்தவர்களை நெகிழச் செய்தது. “நீங்கள் வீட்டிலிருந்து லைவ் பார்த்துக் கொண்டுதான் இருப்பீர்கள் எனத் தெரியும். உங்களையும், உங்கள் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டுதான் நான் அரசியலுக்கே வந்துள்ளேன்” என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.

​தொடர்ந்து பேசிய அவர், “ஏற்கனவே நீங்கள் எனக்காக நிறைய க்யூட்டான வீடியோக்கள் செய்து வருகிறீர்கள், அதையெல்லாம் நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். அம்மாவிடம் யாராவது யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்று கேட்டால், நீங்கள் பின்னால் இருந்து கொண்டு ‘விஜய்’ என்று சொல்லச் சொல்லுங்கள். அதையே தொடர்ந்து செய்யுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்தார். மேலும், வீட்டில் இருக்கும் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா மற்றும் ஓட்டுப் போடும் வயதில் இருக்கும் அண்ணன், அக்கா என அனைவரையும் ‘விசில்’ சின்னத்திற்கு ஓட்டுப் போடச் சொல்லுமாறு குழந்தைகளிடம் ஒரு அன்புப் போராளியாகக் கோரிக்கை வைத்தார்.