தன்னைத் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பவர்களுக்கும், கேலி செய்பவர்களுக்கும் நடிகர் விஜய் சேலம் மேடையில் மிகக் கடுமையான மற்றும் உணர்ச்சிகரமான பதிலடி கொடுத்துள்ளார். “ஏய் விஜய்.. வீட்டை விட்டு வெளியே வா.. பனையூரை விட்டு வெளியே வா.. என்று சிலர் சொல்கிறார்கள். அவர்களுக்கு என் வீடு எது என்று தெரியுமா? அது எங்கே இருக்கிறது என்று தெரியுமா?” என அதிரடியாகக் கேள்வியெழுப்பினார்.
தன்னைச் சீண்டிப் பார்ப்பதாக நினைத்துக் கொண்டு கேலியும் கிண்டலும் செய்பவர்களுக்குப் பதிலளித்த அவர், “என் தாய் நாடான இந்தத் தமிழ்நாடுதான் என் வீடு. என் வீட்டில் மொத்தம் 8 கோடிப் பேர் இருக்கிறார்கள். இந்தத் தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் என் குடும்ப உறுப்பினர்கள்தான்” என்று நெகிழ்ச்சியுடனும் ஆவேசத்துடனும் பேசினார். விஜய்யின் இந்த “வீடு” பற்றிய விளக்கம் அங்கிருந்த தொண்டர்களிடையே பெரும் கரவொலியை எழுப்பியதுடன், சமூக வலைதளங்களிலும் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
