இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தன்னுடைய ஓய்வுக்கான காரணத்தை தெரிவித்துள்ளார். அதில் நான் களத்தில் இறங்கும் போதெல்லாம் 100 சதவீத அர்ப்பணிப்புடன் விளையாட முயற்சிப்பேன். உடற்தகுதியைப் பொறுத்தவரை இன்னும் 3 வருடங்கள் என்னால் கிரிக்கெட் விளையாட முடியும்.

ஆனால், நீங்கள் மனதளவில் சரியில்லாத நேரங்களும் உண்டு. மனநலம் சரியில்லை என்றால் களத்தில் விளையாட இறங்கக் கூடாது. வெளியாட்களுக்கு இவை எதுவும் தெரியாது. ஆனால், ஒரு கிரிக்கெட் வீரராக இதை நான் புரிந்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.