Kayleigh castle என்ற 35 வயதுடைய பெண் பெண் ஒருவர் இணையத்தின் மூலமாக ஒருவருடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில் ஒருநாள் சான் பிரான்சிஸ்கோ வரை சுமார் 5,000 கி.மீ பயணித்து அந்த ஆண் நண்பருடன் டேட்டிங் செய்ய சென்றுள்ளார். அந்த ஆண் நண்பர் Kayleigh-யை கவனிக்காமல் அதிக நேரம் மொபைலில் செலவிட்டிருக்கிறார்.

அதனால் அவர் தனக்கேற்றவர் இல்லை எனக்கூறி, அவருடன் நண்பராக இருக்க முடிவெடுத்துள்ளார். இதனையடுத்து இந்த விஷயத்தை அவரிடமும் தெரிவித்துவிட்டு லண்டனுக்கே திரும்பி சென்று விட்டாராம்.