உத்தரபிரதேச மாநிலத்தின் லலித்பூர் மாவட்டம், பாலாபெஹாட் பகுதியில் அரிதான மற்றும் அதிர்ச்சியூட்டும் காட்சி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

6 அடி நீளமுள்ள நாகப்பாம்பு, காட்டு  பகுதியில் உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றில் சுருண்டு அமர்ந்து, படம் எடுத்து   சீறும் காட்சி பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பாம்பின் உரத்த சீறல் வீடியோவில் தெளிவாக கேட்க, அதை பார்த்த அங்கிருந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். தற்போது, இந்த பருவத்தில் பல இடங்களில் பாம்புகள் வெளிப்படுவது அதிகரித்து வருவதை நினைவுபடுத்தும் வகையில் இந்த சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.

இந்த அசாதாரண காட்சியின் வீடியோ சமூக ஊடகமான X இல் @WeUttarPradesh என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. பதிவின்படி, இந்த காட்சி பாலாபெஹாட் காட்டுப் பகுதியில் பதிவாகியதாக கூறப்படுகிறது, ஆனால் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இன்னும் வரவில்லை. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், , அந்த நாகப்பாம்பு ஊசலாடுவது போல் கயிற்றில் சுருண்டு இருந்தது. இதுபோன்ற காட்சி அரிதாகவே பதிவாகும் என்பதால், வீடியோ வேகமாக வைரலாகியுள்ளது.

“>

 

வீடியோவை பதிவு செய்த நபர், பாம்பின் சீற்ற சத்தத்தால் நீண்ட நேரம் அங்கிருந்து இருக்க முடியாமல் சென்றுவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த மாதமே, இதே பகுதியிலுள்ள ஒரு வீட்டிலிருந்து 16 பாம்புகள் அகற்றப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியது. அதன் பின்னர், இந்த புதிய சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே மேலும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.