திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் ஒட்டுமொத்த வாகன ஓட்டிகளையும் நெஞ்சை பதறவைக்கும் வகையிலான ஆபத்தான பைக் ஸ்டண்ட் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாலிபர் ஒருவர் அதிவேகமாகச் செல்லும் பைக்கின் ஒருபுறமாக (Side seating) அமர்ந்து கொண்டு, கைகளைக் கூட ஹேண்டில்பாரில் சரியாக வைக்காமல், முழுக்க முழுக்க செல்போனை மட்டுமே பார்த்தபடி சுமார் 3 கிலோமீட்டர் தூரம் பயணித்துள்ளார்.

சிறிதும் பொறுப்பற்ற முறையில், தனது உயிரையும் மற்றவர்களின் உயிரையும் பணையம் வைத்து அந்த வாலிபர் செய்த இந்த ஆபத்தான பயணம், அங்கிருந்த சக வாகன ஓட்டிகளை அதிர்ச்சியில் உரைய வைத்துள்ளது. போக்குவரத்து விதிகளைத் துளியும் மதிக்காமல் தேசிய நெடுஞ்சாலையில் ரீல்ஸ் மோகத்தில் வாலிபர் செய்த இந்த பைக் சாகச வீடியோ வைரலாகி வரும் நிலையில், சம்பந்தப்பட்ட நபரைக் கண்டுபிடித்துக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் போலீசாருக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

“>