2026 சட்டசபைத் தேர்தலுக்காகத் தமிழக வெற்றிக் கழகத்தில் வேட்பாளர்கள் தேர்வு இப்போ முழுவீச்சில் நடந்து வருகிறது. ஆனால், கட்சியில் சீட் பெற விரும்புவோரிடம் ஒரு பெரிய தொகை கைமாறுவதாக அரசியல் வட்டாரங்களில் ஒரு தகவல் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. குறிப்பாக, தேர்தலில் போட்டியிடத் தகுதியான வேட்பாளர்களிடம் “கட்சிப் பெயருக்கு 2 கோடி ரூபாய்க்கு டிடி எடுத்துக் கொடுங்கள்; அப்போதுதான் தேர்தலை எதிர்கொள்ளும் பொருளாதார வலிமை உங்களிடம் உள்ளதா என்பது எங்களுக்குத் தெரியும்” என்று ஒரு நிபந்தனை விதிக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது.
இந்த ‘2 கோடி ரூபாய்’ கண்டிஷன் என்பது விஜய்க்குத் தெரியாமல், அவருக்கு நெருக்கமான சில நிர்வாகிகளால் திரைமறைவில் நடத்தப்படுவதாகக் கிசுகிசுக்கப்படுகிறது. “நேர்மையான அரசியல்” என்று மேடைகளில் பேசிவரும் விஜய்யின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் இப்படி ஒரு வசூல் வேட்டை நடப்பது தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை இது விஜய்யின் காதுகளுக்குச் சென்றால், அந்த ‘வசூல்’ டீமுக்கு பெரிய ‘ஆக்ஷன்’ காத்திருக்கும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
