தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஒரு சிறந்த நடிகர் மட்டுமே என்றும், சிறந்த அரசியல்வாதி தாங்கள்தான் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார். இதற்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நாஞ்சில் சம்பத் மிகக் கடுமையான பதிலடியைத் தந்துள்ளார். “உண்மையான மக்கள் தலைவர் யார் என்பது பொதுமக்களுக்கு நன்றாகவே தெரியும்; அது தெரியாதது போல நீங்கள் நடிக்கிறீர்கள். உங்களுக்குள்ளும் அந்த உண்மை தெரியும் என்பது எங்களுக்குத் தெரியும்” என்று அவர் இபிஎஸ்-ஸைச் சாடியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “தமிழக மக்களின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் நீக்கமற நிறைந்துள்ள ஒரே தலைவர் எங்கள் வெற்றித் தலைவர் விஜய் அவர்கள் மட்டும்தான். இந்த உண்மையை வரும் காலம் உங்களுக்கு விரைவில் புரிய வைக்கும்” என்று ஆவேசமாகத் தெரிவித்தார். விஜய்யின் அரசியல் வருகையைத் தொடர்ந்து அதிமுக மற்றும் தவெக இடையே ஏற்பட்டுள்ள இந்த நேரடி மோதல், தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
