தமிழகத்தில் ரயிலில் வடமாநில இளைஞர் சூரஜ் தாக்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து செய்தியாளர் ஒருவர் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் அவர்களிடம் கேள்வி எழுப்பினார். ஆனால், செய்தியாளரின் கேள்விக்கு பதிலளிக்க விரும்பாத ப. சிதம்பரம், “நீங்கள் பேசும் தமிழ் எனக்குப் புரியவில்லை” என்று கூறி அங்கிருந்து நகர்ந்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, “தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிக்கே தமிழ் புரியவில்லையா?” அல்லது “பதில் சொல்ல விருப்பம் இல்லாமல் இப்படித் தவிர்க்கிறாரா?” என்ற விவாதத்தை கிளப்பியுள்ளது. இந்தச் சம்பவத்தை முன்வைத்து இணையவாசிகள் பலரும் காரசாரமான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் கூடுதல் இடங்களைப் பெறுவதிலேயே காங்கிரஸ் குறியாக உள்ளது.
What’s your opinion on the attack on Suraj in Tamil Nadu? asks the reporter.
I don’t understand your Tamil, says Tamil Congress leader P. Chidambaram.
For Congress, getting extra seats from the DMK in 2026 seems more important than defending the North Indians.😤 pic.twitter.com/mGTUe1HzsB
— Sanghi Prince 🚩 (@SanghiPrince) January 1, 2026
அதற்காகவே வடமாநிலத்தவர் மீதான தாக்குதல் போன்ற சர்ச்சைக்குரிய விவகாரங்களில் மென்மையான போக்கை கடைபிடிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஒரு தேசியக் கட்சியின் தலைவராக இருந்துகொண்டு, சக மனிதர் மீதான தாக்குதல் குறித்துக் கேட்டபோது அதை அலட்சியம் செய்தது கண்டனத்திற்குரியது என நெட்டிசன்கள் பலரும் தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
