இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு வீடியோ பலரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. அந்த வீடியோவில், குளிர்பானம் போன்ற பொருட்கள் இருக்கும் டின் கேன்களில் அச்சிடப்பட்ட உற்பத்தி தேதி மற்றும் காலாவதி தேதியை ஒரு ஸ்பிரே பொருள் கொண்டு எளிதாக அழித்துவிடுகின்றனர். அழித்த பிறகு, மீண்டும் புதிய அச்சு இயந்திரம் மூலம் சமீபத்திய தேதிகளை அச்சிட்டு வைக்கின்றனர். இது பழைய பொருட்களை புதியவை போல காட்டி விற்பனை செய்வதை காட்டுகிறது.
இதுபோன்ற ஏமாற்று செயல்களால், காலாவதியான உணவுப் பொருட்களை மக்கள் அறியாமல் சாப்பிட்டால், உடல் நலத்துக்கு பெரிய பாதிப்புகள் ஏற்படும். வயிற்றுப்போக்கு, வாந்தி, உணவு விஷம் போன்ற பிரச்சனைகள் வரலாம், மேலும் உயிருக்கே ஆபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. இந்த வீடியோ வைரலாகி, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது
